சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீடு முன் அவரின் ரசிகர்களின் சார்பில் நிறைய போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017 டிசம்பர் இறுதியில் அறிவிப்பை வெளியிட்டார். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அவர் அரசியலுக்கு வருவது குறித்து உறுதியாக எதுவும் தெரிவிக்கவில்லை.
கட்சி எப்போது தொடங்கப்படும், கூட்டணி என்ன? கொள்கை என்ன என்பது குறித்து ரஜினிகாந்த் அதன்பின் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவ்வப்போது செய்தியாளர்களை மட்டும் சந்தித்து வந்தார்.