நியூயார்க்: கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் COVID19 நோய் தாக்குதலை பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் நேற்று அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் உலக நாடுகள் திணற தொடங்கி உள்ளது. உலகம் முழுக்க 123 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.உலகம் முழுக்க 119,177 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர்.உலகம் முழுக்க 4,295 கொரோனாவால் பலியாகி உள்ளனர். முடங்கிய ஐரோப்பா.. வேகமாக உயரும் பலி எண்ணிக்கை.. 1,26,139 பேரை தாக்கிய கொரோனா.. கொடூரம்! என்ன அறிக்கை இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், கொரோனா வைரஸ் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். உலகம் முழுக்க இந்த வைரஸ் பரவும் வேகமும், அதன் தாக்கமும் அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் COVID19 நோய் தாக்குதலை பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கிறோம், என்று கூறியுள்ளது. எப்படி இதை ஆங்கிலத்தில் Pandemic என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், Pandemic என்ற வார்த்தை சாதாரணமாக பயன்படுத்த கூடிய வார்த்தை கிடையாது. இது மிகவும் முக்கியமானது. இந்த வார்த்தையை தவறாக பயன்படுத்தினால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும். மக்கள் இடையே இதனால் தேவையற்ற பயம் ஏற்படும். என்ன தீவிரம் ஆனாலும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அதை பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கிறோம். பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் கொரோன வைரசுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். உலக சுகாதார மையம் இதற்காக தொடர்ந்து தீவிரமாக செயல்படும். போர்க்கால முறை உலகம் முழுக்க இருக்கும் எல்லாம் நாடுகளும் உடனே அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு போர்க்கால முறையில் செயல்பட வேண்டும். நோய் தாக்குதல் உள்ளவர்களை தனிமைப்படுத்தி, உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். நோய் தாக்குதல் பரவ வாய்ப்புள்ள எல்லோரையும் தனிமைப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளை எல்லோரும் தயார்படுத்த வேண்டும். மருத்துவ பணியாளர்கள் உங்கள் நாட்டில் உள்ள மருத்துவ பணியாளர்களை இதற்காக பயிற்சி கொடுத்து தயார் படுத்துங்கள். நாம் எல்லோரும் இணைந்து பணியாற்ற இதுதான் சரியான நேரம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக ஒரு நோய் தாக்குதலை உலக சுகாதார மையம் பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்காது. உலகம் முழுக்க பரவினால் மட்டுமே இப்படி அறிவிக்கப்படும். தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! மேலும் நியூயார்க் செய்திகள் உலகிலேயே முதன்முறையாக.. வாடகைத்தாயாக மாறிய இஸ்ஸி.. இரண்டு குட்டிகளுக்குத் தாயான கிபிபி! எங்கே பரவ கூடாது என்று நினைத்தார்களோ.. அங்கேயே வந்துவிட்டது.. 'ஹு'விற்கு கொரோனா கொடுத்த ஷாக்! இந்தியா என்ன செய்யும்? சந்தேகமாக இருக்கிறது.. கொரோனாவால் அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை! டிரம்பிற்கு அழுத்தம்.. அணி திரண்ட தலைகள்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் டெல்லி கலவரம்! தலைவர்களின் தோல்வி இது.. டெல்லி வன்முறையை விமர்சித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்.. டிரம்பிற்கு குட்டு! சீனாவில் வேகம் குறைந்த கொரோனா.. மற்ற நாடுகளில் தீவிரம்.. உலகம் முழுக்க 119,177 பேர் பாதிப்பு! ஈரான், இத்தாலியில் வேகமாக பரவும் கொரோனா.. மீளும் சீனா.. உலகம் முழுக்க 114422 பேர் பாதிப்பு! சீனாவை விட மோசம்.. மோசமாக திணறும் ஈரான், இத்தாலி, தென் கொரியா.. கொரோனா களநிலவரம் என்ன? ஏப்ரல் 29ம் தேதி அதிகாலை 4.56மணி.. பயப்படத் தேவையில்லை... மக்கள் வயிற்றில் பாலை வார்த்த நாசா! அந்த ஒரு மீட்டிங்.. கொரோனா மெமோ.. அமெரிக்காவின் முக்கிய 'தலைகளுக்கு' புது சிக்கல்.. என்ன நடக்குமோ? ஏழைகளின் ஹீரோ.. இடதுசாரி.. அமெரிக்க அதிபர் தேர்தலில் இப்போதே கலக்கும் பெர்னி.. டிரம்பிற்கு அதிர்ச்சி டிரம்ப் கொடுத்த வாக்கு.. கடைசியில் பெரும் ஏமாற்றம்.. அமெரிக்காவும் விலக்கல்ல.. கொரோனா தாண்டவம்! உலகிலேயே முதன்முறையாக.. வாடகைத்தாயாக மாறிய இஸ்ஸி.. இரண்டு குட்டிகளுக்குத் தாயான கிபிபி! எங்கே பரவ கூடாது என்று நினைத்தார்களோ.. அங்கேயே வந்துவிட்டது.. 'ஹு'விற்கு கொரோனா கொடுத்த ஷாக்! இந்தியா என்ன செய்யும்? சந்தேகமாக இருக்கிறது.. கொரோனாவால் அச்சத்தில் அமெரிக்க உளவுத்துறை! டிரம்பிற்கு அழுத்தம்.. அணி திரண்ட தலைகள்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிரொலிக்கும் டெல்லி கலவரம்! தலைவர்களின் தோல்வி இது.. டெல்லி வன்முறையை விமர்சித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்.. டிரம்பிற்கு குட்டு! சீனாவில் வேகம் குறைந்த கொரோனா.. மற்ற நாடுகளில் தீவிரம்.. உலகம் முழுக்க 119,177 பேர் பாதிப்பு! ஈரான், இத்தாலியில் வேகமாக பரவும் கொரோனா.. மீளும் சீனா.. உலகம் முழுக்க 114422 பேர் பாதிப்பு! சீனாவை விட மோசம்.. மோசமாக திணறும் ஈரான், இத்தாலி, தென் கொரியா.. கொரோனா களநிலவரம் என்ன? ஏப்ரல் 29ம் தேதி அதிகாலை 4.56மணி.. பயப்படத் தேவையில்லை..
தயாராக இருங்கள்.. கொரோனாவை பெருந்தொற்றுநோயாக அறிவித்தது உலக சுகாதார மையம்.. மிக முக்கிய அறிக்கை