ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. சத்தமில்லாமல் திடீரென வெளியான தர்பார் மோஷன் போஸ்டர்! #Darbar

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் சத்தமில்லாமல் வெளியாகியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் ஏஆர் முருகதாஸ் முதல் முறையாக இணைந்து தயாராகியிருக்கும் படம் தர்பார். இந்தப் படம் வரும் 9ஆம் தேதி ரிலீஸாகிறது.

இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆதித்ய அருணாச்சலம் என்ற கேரக்டரில் நடித்திருக்கும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.